full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தீபாவளிக்கு வந்தே தீருவோம் – “மெர்சல்” தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி!

என்ன பிரச்சினை வந்தாலும் சமாளித்து தீபாவளிக்கு வெளியிடுவோம் என்று ‘மெர்சல்’ தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ”மெர்சல்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற குழப்பம் இன்னும்கூடத் தீர்ந்தபாடில்லை. இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் மெர்சலின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நிச்சயமாக மெர்சல் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு தரமான படமாக மெர்சலை எடுத்த ஒரு மனநிறைவு எங்களுக்கு இருக்கிறது. விஜய் சார், ரஹ்மான் சார், அட்லி என ஒரு மேஜிக்கலான கூட்டணி அமைந்தது எங்களது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். இந்த அதிர்ஷ்டம் எங்களது நூறாவது படத்தில் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அட்லி நல்ல கதை வைத்திருக்கிறார் என்று விஜய் சார் சொன்னதும் அவரைத் தேர்வு செய்தோம். ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளராக வேண்டும் என்று அட்லி விரும்பினார். ரஹ்மான் சாரிடம் பேசியதும் உடனே ஒப்புக் கொண்டார். அதுவே பெரிய விஷயம். இப்படத்தில் நித்யாமேனன் வலுவான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். ‘மெர்சல்’ முழுப்படத்தையும் பார்த்துவிட்டு விஜய் சார் சந்தோஷப்பட்டார்.

ஒரு படத்தை தயாரிக்கும் போது, அதை சரியாக வெளியிட்டுவிட வேண்டும் என்பதுதான் முதல் நோக்கமே. என்ன பிரச்சினை வந்தாலும் அதை சமாளித்து வெளியிடுவோம். ஏனென்றால் அதை சரியாக கொண்டு போய் மக்களிடம் கொடுத்தால் மட்டுமே எங்களுடைய பணி முடிவடைகிறது. மெர்சல் படத்திற்காகத் திரைத்துறை நண்பர்கள் பலரும் எங்களுக்காக உழைத்திருக்கிறார்கள். அதற்காகவேனும் உறுதியாக தீபாவளிக்கு வெளியிட்டே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.