full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

மேயாத மான் – விமர்சனம்!

“மெர்சல்” படத்தோடு கெத்தாக கோதாவில் இறங்கிய அந்த துணிச்சலுக்கே தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் ரத்னகுமாருக்கு வாழ்த்துகள்..

உள்ளபடியே தனக்கான ஏரியாவில் துள்ளி விளையாடுகிறது இந்த “மேயாத மான்”!

முதலில், காலங்காலமாக மோசமாகவே சித்தரிக்கப்பட்டு வரும் வடசென்னை வாசிகளின் அழகான, பாசமிகு உண்மை உலகத்திற்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் ரத்ன குமார்.. வெல்கம் டூ தமிழ் சினிமா.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் முழுக்க முழுக்க லவ் எண்டெர்டெயின்மெண்ட் + நட்பு + தங்கச்சி செண்டிமென்ட் கலந்த ஒரு காமெடி பேக்கேஜ் தான் இந்த ” மேயாத மான்’.

வைபவ் சிறப்பாக நடித்திருக்கிறார் மங்காத்தாவிற்குப் பிறகு.. டிவி சீரியலில் பார்த்த பொண்ணு, என்னா அழகாய் இருக்கிறார்.. பத்தாததிற்கு நன்றாக நடிக்க வேறு செய்கிறார்.. தமிழ் பேசும் அழகான ஹீரோயின்.. வெல்கம் ப்ரியா பவானி ஷங்கர்.

படத்தில் அந்த தங்கச்சி கேரக்டர் செய்திருக்கும் பொண்ணும், அந்த வொர்க்‌ஷாப் ஹெல்பர் சிறுவனும் செம்ம.. தூள்.. பட்டாசு.. அதிலும் சுடர்விழியாகிய தங்கச்சியின் நடிப்பு, சிறப்போ சிறப்பு.

சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாளிச்ச தக்காளிசோறு கணக்கா செம்ம மணம்.. “தங்கச்சி”, ” குத்துவிளக்கு” சாங்கெல்லாம் நார்த் மெட்ராஸ் மேஜிக்.. அதெல்லாம் வேற ரகம்!!

வைபவ் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவது சலிப்பு.. அதேபோல் அந்த திடீர் சண்டையும் கொஞ்சம் உறுத்தியது, அப்டியே அந்த வீட்டுநாய் தெருநாய் மேட்டரையும் சேர்த்துக்கலாம்.. ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் இவற்றிலிருந்து திசைதிருப்புவதால் பெரிய சேதமொன்றுமில்லை..

படத்தின் பெரிய ப்ளஸ் வசனங்கள் தான்.. ஒவ்வொரு கேரக்டர் பேசுகிற வசனங்களும் சோக காட்சிகளில் கூட சிரிப்பு வர வைப்பது சிறப்பு..

மொத்தத்தில் “மேயாத மான்” சாயாத மான்!!