தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லி பாபு. ஹாரர் காமெடியில் கலக்கிய மரகத நாணயம் துவங்கி, எட்ஜ்-ஆஃப் சீட் சைக்கோ-த்ரில்லர் ராட்சசன், ரோம்-காம் ஓ மை கடவுளே, அழுத்தமான படைப்பான’பேச்சிலர்’ என முற்றிலும் வித்தியாசமான பல திரைப்படங்கள் தந்து, தயாரிப்பாளராக சிறப்பான ஒரு இடத்தை பெற்றுள்ளார்.


