இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அமரன் படக் குழு

cinema news News

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அமரன் படக் குழு

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அமரன் படக் குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் R. மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து திரைப்படம் வெற்றியடைந்ததற்கான வாழ்த்துக்களைப் பெற்றனர். இவர்களுடன் விஸ்வநாத் ராமசுவாமி, நிறுவனர் மற்றும் இயக்குனர், Divo Movies மற்றும் முன்னாள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த col. சரவண வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தேசப்பற்று மற்றும் இந்திய ராணுவம் குறித்து மிகச் சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

திரு. கமல்ஹாசன் தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு இந்திய ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அதன் காரணமாக மிகுந்த உண்மைத்தன்மையையுடன் இந்திய ராணுவத்தின் நாயகர்களை வெளிப்படுத்த உதவியதாகவும் கூறியுள்ளார்.

*******

New Delhi, 29 November 2024

Minister of Defence Shri Rajnath Singh met the makers of the “Amaran” – actor Siva Kartikeyan, Producer R. Mahendran and director Rajkumar Periasamy at his residence in New Delhi and congratulated them on the film’s success.

Shri Rajnath Singh deeply appreciated the team for showcasing the patriotism and heroism of Major Mukund Varadarajan and the Indian Army.

Shri Kamal Haasan, who is currently abroad, sent his deep appreciation and and thanked the Hon’ble Minister for the constant support and cooperation of the Ministry of Defence and Indian Army during the film’s production, which played a pivotal role in the film’s authentic portrayal of the heroes of Indian Army.

The meeting was also attended by Vishwanath Ramaswamy, Founder and Director, Divo Movies and Vinoth Saravanan, Col (Retd.).