full screen background image
Search
Wednesday 18 December 2024
  • :
  • :
Latest Update

மிஸ் யூ – திரைவிமர்சனம் (மிஸ் பண்ணாதீங்க) – Rank 4/5

மிஸ் யூ – திரைவிமர்சனம் (மிஸ் பண்ணாதீங்க) – Rank 4/5

மிஸ் யூ வித்தியாசமான காதல் கதையாக இல்லை எப்பவும் போல மரத்தை சுற்றும் கதையா என்று பார்ப்போம். சித்தார்த் – வாசுதேவன். ஆஷிகா ரங்கநாத் – சுப்புலட்சுமி, கருணாகரன் பாலசரவணன்,லொள்ளுசபா” மாறன் சஸ்திகா பொன்வண்ணன் – ராமச்சந்திரன்

ஜெயபிரகாஷ் – ராஜேந்திரன் ,சரத் லோஹிதஸ்வா – சிங்கராயர்,ராம – ஜோதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இயக்கம் என்.ராஜசேகர் இசை – ஜிப்ரான் ஒளிப்பதிவு கேஜி வெங்கடேஷ்

சித்தார்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் மிஸ் யூ. இப்படத்தை மாப்ள சிங்கம், களத்துல சந்திப்போம் படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கியுள்ளார். கணவன், மனைவிக்கு இடையேயான காதல் கதையாக இது உருவாகியுள்ளது. படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். சித்தார்த் உதவி இயக்குனராக இருப்பவர். இவருக்கும் ஒரு அரசியல் வாதிக்கும் இடையே பிரச்சினை வர சித்தார்த்தை கொலை செய்ய முயற்சி நடக்கிறது . இதில் தலையில் அடிபடும் சித்தார்த்துக்கு தனது வாழ்க்கையில் கடந்த இரண்டு வருடங்கள் நடந்த விஷயங்கள் மறந்து விடுகிறது. மனநிம்மதிக்காக வெளியூர் செல்ல நினைக்கும் போது கருணாகரனை சந்திக்கும் சித்தார்த் அவருடன் பெங்களூரு செல்கிறார். அங்கு நாயகியை பார்க்கும் சித்தார்த்துக்கு காதல் வருகிறது. ஆனால் நாயகி இவரது காதலை மறுக்கிறார். இதனைஅடுத்து தனது நண்பர்கள் மற்றும் அம்மாவிடம் காதலி பற்றி சொல்லும்போது அதிர்ச்சி அடையும் அவர்கள் இந்த பெண் வேண்டாம் என்கின்றனர். சித்தார்த் தொடர்ந்து வற்புறுத்தவே ஏற்கனவே உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்ற உண்மை தெரியவருகிறது. இவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன? அரசியல் வாதி பிரச்சினை என்ன ஆனது? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே மிஸ் யூ.

சித்தார்த் சித்தா படத்திற்கு பிறகு மற்றும் ஒரு நல்ல படம் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களம் ரசிக்க வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை இளமை துள்ளலுடன் பார்க்க முடிகிறது. நடனமும் ஆடியுள்ளார். தனது மறதி இருப்பதை மறந்து மனைவியிடமே காதல் சொல்லும் நபராக அசத்தியுள்ளார். சண்டைக் காட்சிகளும் நன்றாக உள்ளது.

நாயகி ஆஷிகா ரங்கநாத் அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்துள்ளார். சோகமான காட்சிகளில் அவரது முகபாவனைகள் நல்லா இருக்கு. நண்பர்களாக நடித்துள்ள கருணாகரன், பால சரவணன், சஷ்டிகா ஆகியோர் காமெடியில் உதவியுள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை காதல் படங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்துள்ளது. வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ள இயக்குனர் போரடிக்காத திரைக்கதை மூலம் நல்லதொரு பீல் குட் படத்தை கொடுத்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையே உள்ள அன்பின் புதிய பரிமாணத்தை இப்படத்தில் சொல்லியுள்ளார்.

கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. மொத்தத்தில் மிஸ் யூ நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத படம்.