ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பாஜக செயல்படுகிறது – மு க ஸ்டாலின்

General News

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசை விமர்சித்து சில வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், மெர்சல் படத்தின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பேச்சு, படைப்பு சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும். ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாக பாஜக செயல்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.