full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எம்.கே.எஸ் ஸ்டுடியோஸ் எடுத்த மெர்சல் மூவ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்’. இப்படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் `ஸ்பைடர்’ படம் உருவாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்த இரு படங்களின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் விநியோக உரிமையை எம்.கே.எஸ். ஸ்டூடியோஸ் கைப்பற்றியிருக்கிறது. முன்னதாக விஜய்யின் `மெர்சல்’ படத்தின் விநியோக உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.