பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றார். அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் லீ கெசி யாங் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் 69-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசியான் நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆசியாவில் 10 நாடுகள் உள்ளன. மோடியின் இந்த அழைப்பை 10 நாட்டு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். இதை வெளியுறவு துறை செயலாளர் (கிழக்கு) பிரித்திசரண் தெரிவித்தார்.
இந்தியா- ஆசியான் சிறப்பு மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆசியான் அமைப்பின் உள்ள 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதற்கு மறுநாள் 69-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு பிறகு குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்வதை 125 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் வரவேற்பதாக பிரதமர் தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், புருனே, கம்போடியா, மாவேஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய 10 நாடுகள் ஆசியான் அமைப்பில் உள்ளன.