மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

cinema news First Look
0
(0)

கௌதம் மேனன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட “மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 

“மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், உருவாகும் திரில்லர் திரைப்படமான “மூன்றாம் கண்”
Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் திரைப்படம் “மூன்றாம் கண்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், மிக சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது. கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று, காட்சியளிக்கிறார்கள். மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்குகிறார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் R.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார். பின்னணி இசைக்கோர்வையை ராஜ்பிரதாப் செய்கிறார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்குக் கலை இயக்கம் செய்கிறார். இப்படத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

விரைவில் போஸ்ட் புரடக்சன் துவங்கவுள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாகும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.