full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

பேஷன் ஷோவில் ஒரு உலகசாதனை!!

இந்த F face creation நிறுவனம் உலகில் முதன்முறையாக அதிமான 147 ஆண்களை வைத்து 588 வகை உடை அலங்காரம் செய்து 7 சுற்றுகளாக அணிவகுத்து MR RED TIE என்ற பேஷன் ஷோ மூலம் ஒரு உலகசாதனை படைத்துள்ளனர். இதில் 60வயதுக்கு குறைவான பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பங்கேற்றார்கள்..

இந்த உலக சாதனையை கல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரெகார்டு ஃபோரமின் (UNIVERSAL RECORD FORUM) ISO CERTIFIED ORGANISATION ஐ சார்ந்த நடுவர் சுனில் ஜோசப் தலைமையில் வழங்கபட்டது …

இந்த MR RED TIE எனும் உலகசாதனை பேஷன் ஷோவை பற்றி ஆடை வடிவமைப்பாளரும் , இந்த F FACE நிறுவனத்தின் உரிமையாளருமான சியா ஸ்ரீ கூறுகையில்,

“இந்த பேஷன் ஷோ பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு வன்கொடுமைகளை அகற்ற வலியுறுத்தி நடைபெற்றது. அதுமட்டுமின்றி பொதுவாகவே பேஷன் ஷோ என்றாலே அதிகமாக பெண்களின் அணிவகுப்பே இருந்து வருகிறது. பெண்களை மட்டும் காட்சி பொருளாக எல்லோரும் பார்க்கிறார்கள். அதனை மாற்ற ஒரு சிறு முயற்சியாக அதிகப்படியான ஆண்களை வைத்து ஒரு பேஷன் ஷோ நடத்தி உலக சாதனை படைத்துள்ளோம். பேஷன் ஷோ என்றாலே பெண்களே பங்கேற்று சம்பாதிக்க முடியும் என்ற நிலையை மாற்றி புதிதாக பங்கேற்கும் ஆண்களும் பேஷன் ஷோவில் சம்பாதிக்க முடியும் என்ற நிலையை உருவாகியுள்ளோம். இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கெதிரான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவே நடத்தி முடித்துள்ளோம்.”

இந்த MR RED TIE உலக சாதனை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நடிகைகள் ஸ்ரீ துர்கா(தொலைக்காட்சி புகழ் ) , ஸ்ரீதேவி(ராஜா ராணி சீரியல் ) , சுவேதா பண்டிக்கர்(விஜய் டிவி புகழ் ), பிரியதர்ஷன் ராஜ்குமார், ஷைனி ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்தார். இந்நிகழ்ச்சி வண்டலூரில் GST சாலையில் உள்ள கல்யாண் ஹோம்டெல் ஹோட்டலில் நடைபெற்றது.