full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விபத்தில் சிக்கினார் பிரதமர் மோடியின் மனைவி

ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த சாலை விபத்தில் ஜசோதா பென்னின் உறவினரான வசந்த்பாய் மோடி என்பவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த ஜசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜசோதாபெனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரா மாவட்டத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்று விட்டு குஜராத்திற்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆரம்ப கட்ட தகவலின் படி, ஜசோதா பென்னிற்கு இலேசான காயமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.