full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குனர் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் முருகானந்தம்

 

சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் மணிவண்ணன். இவர் பல வெற்றி படங்களை இயக்கியும், வெற்றியடைந்த படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு.

மறைந்த இயக்குனர் மணிவண்ணனை, ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தம் ஞாபகப்படுத்துவாதாக படவிழாவில் பலரும் பாராட்டியுள்ளனர்.

முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், சூரி, ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், அருள் தாஸ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் லட்சுமணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள் தாஸ் ஆகியோர் பேசும் போது, இயக்குனர் முருகானந்தத்தை பார்க்கும் போது பழம்பெரும் இயக்குனர் மணிவண்ணன் ஞாபகம் வருகிறது. அவரது நகைச்சுவை பேச்சு, உடல் மொழி ஆகியவை அப்படியே இருக்கிறது. இதைக்கேட்ட முருகானந்தம், பெரிய இயக்குனர் மணிவண்ணன், அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அளவிற்கு நான் வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றார்.