full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வெண்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது – எஸ்.பி.பி.சரண்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

“அப்பாவின் உடல்நிலை நேற்று இருந்தது போலத்தான் இருக்கிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறது. அது பொய். அவர் விரைவில் அதன் உதவி இல்லாமல் சுவாசிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து பிரார்த்தியுங்கள். உங்கள் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு குடும்பமாக நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.