டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி”

cinema news

அஜய் அர்ஜூன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு “மைலாஞ்சி”

இப்படத்தில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் . வெற்றி மாறனின் விடுதலை படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு . ஒளிப்பதிவு செழியன், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் இப் படத்தில் கன்னிமாடம் புகழ் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கோலிசோடா 2 நாயகி க்ருஷா குரூப் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க உடன் யோகிபாபு, முனிஷ் காந்த் ஆகியோரும் நடிக்க, படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது.