தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் முக்கியமானவர் மிஷ்கின். நடிப்பு மற்றும் இயக்கம் என இரு துருவங்களில் பயணிக்கும் அவர், இதுவரையில் தனது படங்களில் இசைஞானி இளையராஜாவைத் எந்த ஒரு பெரிய தொழிற்நுட்பக் கலைஞர்களையும் பயன்படுத்தியத்தில்லை. அதேபோல நடிகர், நடிகைகளில் கூட அவர் வளர்ந்து வரும் நடிகர்களையே பயன்படுத்தி இருக்கிறார் இதுவரை.
இந்நிலையில், அவர் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் என்ற தகவல் வந்த போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். மேலும் கதாநாயகன் சாந்தனு என்றும், கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வர ஒட்டுமொத்த திரையுலகின் கவனமும் மிஷ்கினின் அடுத்த படத்தின் மீது திரும்பியிருக்கிறது.
இப்போது, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நிச்சயம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.