full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”

தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே”
எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை எடிட்டர் மோகன் துவக்கி வைத்தார்.இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். ‘பருத்தி வீரன்’, ‘ஆடுகளம்’, ‘இறுதிசுற்று’, ‘ஓகே ஓகே’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் ஆட வைத்த நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான். இந்த சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு
ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.
நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, கலை சுப்பு அழகப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.என் ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.தயாரிப்பு பொறுப்புகளுடன், படத்தொகுப்பையும் சேர்த்து கோபி கிருஷ்ணா
கவனிக்க, நிர்வாக தயாரிப்புக்கு சக்கரத்தாழ்வார் ஏற்றிருக்கிறார்.கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சக்திவாசன் எழுத்து-இயக்கத்தில், நாயகனாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் இந்த திகில் திரைப்படத்திற்கு கதாநாயகி, மற்றும் பிற நடிக-நடிகையர், மற்றும்தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
நடன இயக்குனர் தினேஷ்    l   ஐஸ்வரியா   l  ஆடுகளம் முருகதாஸ்   l  ஷாயாஜி ஷிண்டே   l  ரோகேஷ்    l  கிருஷ்
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: என் ஆர் ரகுநந்தன்
கலை: சுப்பு அழகப்பன்
படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா
நிர்வாக தயாரிப்பாளர்: சக்கரத்தாழ்வார்
ஆக்சன்: ஸ்டான்ட் ஜி.என்
நடனம்: தினேஷ், தினா
இணை இயக்குனர்: வே. செந்தில் குமார்
ஸ்டில்ஸ்: மோதிலால்
தயாரிப்பு மேற்பார்வை: அஸ்கர் அலி, விஜயகுமார்
டிசைன்ஸ்: ஜோசப் ஜாக்சன்
தயாரிப்பு: கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சக்திவாசன்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்