சரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை?

News

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.

அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாச்சியார் படத்தில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.