நடிகர் விஜயகுமாருக்கு ‘டாக்டர் பட்டம்’ – நடிகர் சங்கம் வாழ்த்து

News
0
(0)

நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் நிகர் நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் “பொண்ணுக்கு தங்கமனசு “ என்ற திரைப்படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் கலைச்சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து அக்னிநடசத்திரம், கிழக்கு சீமையிலே, நாட்டாமை, போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய ஆளுமையை செலுத்தி பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நடிப்பை தொடர்கிறார்.

அவரது கலைப்பயணத்தை கௌரவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் நிகர் நிலை பல்கலைகழகம் அவருக்கு வருகிற ஏப்ரல்18ஆம் தேதி டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிப்பதை அறிந்து நங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது கலைப்பயணத்திற்கு தலைவணங்கி தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *