உலக அழகியுடன் திருமணம், சந்தோஷத்தில் நாகசைதன்யா

News
0
(0)

நடிகை சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. திருமணம் அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் தயாராகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு சமந்தாவும் நாகசைதன்யாவும் நேரில் திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள தமிழ் நடிகர்-நடிகைகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வருகிறார்கள். திருமணம் குறித்து சமந்தா கூறும் போது, “தெலுங்கில் முதல் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக அறிமுகமான போது தான் அவரைப் பார்த்தேன். அந்த முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் வயப்பட்டு விட்டேன். மனதளவில் எங்களுக்கு எப்போதோ திருமணம் முடிந்து விட்டது.

வெளி உலகத்துக்காகத்தான் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். என்னிடம் நிறைய பேர் நீங்கள் இருவரும் அழகான ஜோடி என்று பேசுகிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

நாகசைதன்யா கூறும்போது, “உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை. அவர் எனக்கு மனைவியாக அமைவது அதிர்ஷ்டம். அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. கோபம் வந்தால் மட்டும் என்னை முறைத்து பார்ப்பார். திட்ட மாட்டார்.

எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானது, நாங்கள் சந்தித்தது முதல் திருமணம் வரை எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் தொகுத்து யாராவது படமாக எடுத்தால் சந்தோஷப்படுவேன். அந்த படத்தில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம்.” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.