திரைக்கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் நாளைய இயக்குநர் -.நடிகர் பாடலாசிரியர் சினேகன் பேச்சு

cinema news Pooja
0
(0)

திரைக்கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் நாளைய இயக்குநர் -.நடிகர் பாடலாசிரியர் சினேகன் பேச்சு

நாளைய இயக்குநர் பட பூஜை யில் இளையராஜா மற்றும் வைரமுத்து பிரச்னைக்கு விளக்கம் கொடுத்த . நடிகர் கவிஞர் சினேகன்.

எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச் செல்வன், கூல் சுரேஷ், நடன இயக்குனர் தீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடலாசிரியர் சினேகன்,

நாளைய இயக்குநர் – இந்த படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. சினிமாவில் ஒரு இடத்துக்கு வர வேண்டும் என்று போராட்டத்துக்கு பிறகு இயக்குனராக வந்த சித்திக்கு வாழ்த்து தெரிவித்தவர், இந்த படம், முழுக்க சினிமாக்காரர்களை பற்றிய படம் இது போன்ற படங்கள் மிக குறைவான படங்களே வருகிறது. இது போன்ற சினிமா சம்பந்த பட்ட கதைகள் அதிகம் வெளி வரவேண்டும்

இளையராஜா – வைரமுத்து பிரச்சினை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சினேகன், தம் உரிமைக்காக போராடுவது எப்போதும் தவறாக இருக்காது. காலம் தாழ்த்தி இப்போது ஒரு விவாதத்தை துவங்கி இருக்கிறார்கள். அதில் கருத்து சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பாட்டுக்கு இசையா அல்லது இசைக்கு பாட்டா என்பதை விட படத்துக்கு பாட்டு தேவைப்படுகிறது. அதை நோக்கி நான் போகிறேன்.

அவர் உரிமையை அவர் கேட்கிறார்.
இன்னும் நீதிமன்றத்தில் நீதி உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கான நீதி கிடைக்கும். ஒருத்தர் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவது அவர் உரிமை. அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்றும் இல்லை இது சரியா தவறா என்று நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். நான் இதில் தலையிட முடியாது.

ஏற்கனவே ஐபிஆர்எஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. உலக அளவில் இசையை எப்படி பயன்படுத்துகிறார்கள். அது யார் யாருக்கு அந்த உரிமை வரவேண்டும் என்று ஒரு பெரிய கட்டமைப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இளையராஜா சார் உரிமையை கோருகிறார். அதிலுள்ள நியாயம், விவாதங்களை முடிவெடுக்க வேண்டும் என்றும், பணத்தை போடுவது தயாரிப்பாளர் என்றாலும் இங்கு ஒரு சிஸ்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் போது அதை யார் யாருக்கெல்லாம் சேர வேண்டும். அதை உருவாக்கியவர் யார் என்று பைலாவில் இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் வழக்கு போடுகிறார்கள். அது இன்னும் தீர்வுக்கு வரவில்லை. வரும் போது தான் சொல்ல முடியும். ஒரு வழக்கோ விவாதமோ நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை ஒரு தனி மனிதனாக நான் தீர்வு சொல்ல முடியாது.

கூலி படத்தில் ரஜினிகாந்த் பாடுவதாக அதற்கு காப்பி ரைட்ஸ் போட்டதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கண்டிப்பாக என்னுடைய உரிமை பறிபோகும் போது நான் குரல் கொடுப்பேன். ஆனால் அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று போராடுவதற்கான வலு இருப்பவர்கள் போராடுகிறார்கள். வாய்ப்பு வரும்வரை எங்களை மாதிரி சில பேர் அமைதியாக இருக்கிறார்கள். அவரவர் உரிமைக்காக போராடுகிறார்கள். அதில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை நீதிமன்றம் சொல்லும். தவறு செய்வதில் பெரியவர் சிறியவர் என்று யாரும் இல்லை. யார் செய்தாலும் தவறு தவறு தான். அது தவறு கொடுங்கள் என்று அவர் கேட்கிறார். அது தவறா இல்லையா என்று நீதிமன்றம் சொல்ல போகிறது. என்னுடைய பாடல்களை இந்த நிறுவனம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று ஒரு நிறுவனத்தை கேட்பதாகவும், என்னிடம் ஒரு அனுமதியாவது கேட்டிருக்கலாமே என்று தான் சொல்கிறார். இதை வெளியில் இருந்து கணிக்க முடியாது.

இது காலம் தாழ்த்தி போன வழக்கு. ஏற்கனவே 20 வருடமாக நீயா நானா என்று பேசி கொண்டு இருப்பதாகவும், இது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. எங்கே இந்த காழ்ப்புணர்வு தொடங்கியது என்று நமக்கு தெரியாது. எழுத்து எப்படியும் ஒரு எழுத்தாளருக்கு முக்கியமோ அது போல இசையமைப்பாளருக்கு இசை ரொம்ப முக்கியம். தமிழ் சினிமாவிலும் பாடலுக்கு சில நாம்ஸ் இருக்கிறது. தன்னிடம் எதுவும் சொல்லாமல் பயன்படுத்தும் போது கேட்பது எனக்கு தவறாக தோன்றவில்லை. இனி வருங்காலத்தில் கேட்டு பயன்படுத்தலாம். நிறைய படங்களில் இளையராஜா சாரிடம் அனுமதி கேட்டு அவர் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. வழக்கும் போடவில்லை. பணம் கேட்டாரா வாங்குனாரா என்று எதுவுமே நமக்கு தெரியாது. குறைந்தபட்சம் என்னிடம் அனுமதி கேளுங்கள் என்று சொல்கிறார்

வைரமுத்துவை பற்றி கங்கை அமரன் பேசியது தொடர்பாக, இவ்வளவு காலம் கழித்து இவர் பேச வேண்டிய அவசியம் இல்லை. முடிந்து போச்சு. அதற்குப் பிறகு எழுதும்போது ஏதாவது பிரச்சினை வந்தால் பேசலாம். இளையராஜா, வைரமுத்து & கங்கை அமரனுக்கு என்ன பிரச்சினை, பிரிந்த சரியான காரணத்தை சினிமாவில் யாராவது சொல்ல முடியுமா? தொடக்கம் முடிவும் எதுவும் தெரியாது. இடையில் நாம் ஏன் விவாத பொருளாக ஆக்க வேண்டும் என்பது தான். எனக்கு தெரிந்து காலம் தாழ்த்தி அவர் பேசியிருக்கக் கூடாது. அதற்கு அவர் அதிகப்படியான வார்த்தையையும் விட்டிருக்கக் கூடாது. அதுதான் தாழ்மையான வேண்டுகோள் இருவர் மீதும் எனக்கு மதிப்பு இருக்கிறது என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் இமான் அண்ணாச்சி,

சினிமாவை பற்றிய ஒரு படம். அதில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதாகவும் இந்த படம் நிச்சயமாக வெற்றி படமாக அமையும் என்றார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் கூல் சுரேஷ்

நாளைய இயக்குநர் படத்தின் பூஜை. நாளைய இயக்குநர் என்றால் அதற்கு ஒரு ராசி இருக்கிறது. டிவியில் இதே தலைப்பில் வந்து மிக பெரிய வெற்றியை தழுவியது நாம் அறிந்த விஷயம் அந்த ஷோவில் இருந்து வந்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் பண்ணியவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் என பலரும் அதிலிருந்து வந்தவர்கள் தான்.

இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது சந்தோசம். இமான் அண்ணாச்சி மூலம் தான் வாய்ப்பு வந்தது. நமக்கு பின் எப்போதும் கூட்டம் இருக்கும். இது தானா சேர்ந்த கூட்டம் என்று பேசினார்.

தயாரிப்பாளர் யோகராஜ் செபாஸ்டியன் பேசும்போது,

இந்த படம் நாளைய இயக்குநர் என்ற தலைப்பு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு எங்களுக்கு கிடைத்தது.‌ தலைப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நாம் எல்லோரும் சினிமாக்காரர்கள். சினிமாவுக்கு ஒரு போர்வை போர்த்தப்பட்டுள்ளது. அந்த போர்வைக்குள்‌ யார் யார் ஒளிந்துள்ளனர் என்பதை நாம் வெளியில் கொண்டுவர வேண்டும். எல்லா சினிமாக்காரர்களுக்கும் வெற்றிவாய்ப்பு எளிதாக கிடைப்பதில்லை. நான் உதவி இயக்குனராக பணிபுரிய பல இடங்களில் ஏறி இறங்கினேன். அதில் எனக்கு ஏற்பட்ட விஷயங்கள் மற்றவர்களுக்கு நடக்க கூடாது. வாய்ப்பை உருவாக்க வேண்டும் அல்லது வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி கிடைத்தது தான் இந்த கதை. ஒரு சிறிய கதையாக தொடங்கி ஏன் ஒரு சினிமாக்காரன் கதையை உருவாக்க கூடாது என்று இந்த கதையை உருவாக்கியுள்ளோம் என்றார்.

இயக்குனர் சித்திக் வந்திருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தி இந்த படம் மிகப் பெரிய படமாகவும் நிஜக் கலைஞர்களை திரைக் கலைஞர்களாக இது அமையும் அதற்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கு மிக பெரிய நன்றி என்று பேசினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.