தயாரிப்பாளராக மாறிய நமீதா

Special Articles

தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் 2004-ல் நடிகையாக அறிமுகமான நமீதா தொடர்ந்து மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பில்லா, பம்பரக்கண்ணாலே, ஆணை, நான் அவனில்லை, இந்திரவிழா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 2017-ல் காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். இந்த நிலையில் தற்போது நமீதா சினிமா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அவர் தயாரிக்கும் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் உருவாகிறது.

இந்த படத்தில் நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். படத்தின் தலைப்பை வருகிற 26-ந்தேதி நமீதா வெளியிடுகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தயாரிப்பாளரான நமீதாவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.