நந்தன் திரைவிமர்சனம்
இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன்.
நடிகர்கள் :எம் சசிகுமார் – கூழ் பானை, ஸ்ருதி பெரியசாமி – செல்வி , மாதேஷ் – அழகன் , மிதுன் – நந்தன், பாலாஜி சக்திவேல் – கோப்புலிங்கம் , சமுத்திரக்கனி – மருது துரை, கட்ட எறும்பு ஸ்டாலின் – எழுத்தர், வி ஞானவேல் – மாவட்டம், ஜி எம் குமார் – பெரியய்யா, சித்தன் மோகன் – தண்டபாணி , சகதி சரவணன் – பொதியப்ப ராசு ஆர்.வி. சரண் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையில் இரா. சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இருக்கும் படம் நந்தன்.
ஊராட்சி மன்றத் தலைவராக பரம்பரையாக ஆதிக்கம் செய்யும் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) புதுக்கோட்டை வணங்கான்குடி உயர் சாதியைச் சேர்ந்தவர். வணங்கான்குடி ரிசர்வ் தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் கோப்புலிங்கம் பதவியை விட்டு கொடுக்க மனமில்லாதவராக சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் வீட்டில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கூழ் பானை என்கிற அம்பேத்குமாரை (சசிகுமார்) அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கிறார். முதலில் மறுக்கும் அம்பேத்குமார், தன் மனைவி செல்வியின் (ஸ்ருதி பெரியசாமி) வற்புறுத்தலின் பேரில் சம்மதிக்க மனு தாக்கல் செய்து தேர்வாகிறார்.
தலைவர் பதவி கிடைத்தாலும் அதற்கான அதிகாரத்தை கோப்புலிங்கம் கையில் இருப்பதால் தன் சமூகத்திற்கு நன்மை செய்ய முடியாமல் தவிக்கிறார் அம்பேத்குமார். தன் சமூகத்திற்குகென்று மயானம் இல்லாததால் அதற்கு மனு கொடுக்கும் அம்பேத்குமாரின் நடவடிக்கையால் அதிருப்தியாகும் கோப்புலிங்கம் ராஜினாமா செய்ய வைத்து நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துகிறார். அதன் பின் இன்னோரு ஒடுக்கப்பட்ட சாதி நபரை நிற்க வைக்கும் முயற்சியில் கோப்புலிங்கம் வெற்றி பெற்றாரா? அம்பேத்குமார் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து எதிர்த்து நின்று ஜெயித்தாரா? என்பதே கதையின் முடிவு.
எம் சசிகுமார் கூழ் பானை என்கிற அம்பேத்குமாராக ஒடுக்கப்பட்ட சமூக இளைஞராக கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இவரின் உழைப்பு சில இடங்களில் இயல்பாகவும், சில இடங்களில்; குணாதிசயங்கள் அப்பாவியாகவும், தெளிந்த மனதுடையவராக மாறுபட்டு தெரிவதை உணர முடிவதால் சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம்.
ஸ்ருதி பெரியசாமி சாய்குமார் மனைவி செல்வியாக வாழ்ந்துள்ளார் மாதேஷ் – அழகன் , மிதுன் – நந்தன், பாலாஜி சக்திவேல் வில்லன் கோப்புலிங்கமாக , சமுத்திரக்கனி – மருது துரை, கட்ட எறும்பு ஸ்டாலின் – எழுத்தர், வி ஞானவேல் – மாவட்டம், ஜி எம் குமார் – பெரியய்யா, சித்தன் மோகன் – தண்டபாணி , சக்தி சரவணன் – பொதியப்ப ராசு ஆகியோர் கொடுத்த கதாபாத்திரங்களை திறம்பட செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.வி. சரண், இசை – ஜிப்ரான் வைபோதா, படத்தொகுப்பு – நெல்சன் ஆண்டனி ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு சிறப்பு.
உள்ளுர் கோயிலின் அடுத்த அறங்காவலரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ‘உயர் சாதி’ மக்களிடையே நடக்கும் உரையாடல் விவாதத்துடன் நந்தன் கதைக்களம் தொடங்க அங்கு எதிர்த்து குரல் எழுப்பும் வணங்கான்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரே படித்த தலித் இளைஞன் நந்தன் பின்னர் கொலை செய்யப்படுகிறான். அதன் பின் ஒடுக்கப்பட்ட சமூகம் தொடர்ச்சியாக சந்திக்கும் அவமானங்கள், அடக்குமுறைகள், அதிர்ச்சிகள், உடல் ரீதியான மனரீதியான துன்புறுத்தல்கள்; மற்றும் அமைப்பு ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி அவர்கள் ஒவ்வொருவரும் நந்தனாக மாறுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லி புரிய வைப்பது தான் படம். உயர் அதிகார பதவியில் இருக்கும் சாதிய அரசியல், அதனால் ஏற்படும் தாக்கத்தையும், விபரீத விளைவுகளையும் சந்திக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களை தோலூரித்து காட்டியுள்ளார் இயக்குனர் இரா.சரவணன்.
பதவி, அதிகாரம் கிடைத்த பின்னரும் சாதி பாகுபாடால் அவமானப்படுத்தப்படும் மக்களின் மனக்குமறலையும் ஆவணப்படமாக இறுதியில் காட்டி நம்பகத்தன்மையோடு கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் இரா.சரவணன்
மொத்தத்தில் நந்தன் ஒரு புரட்சிவாதி