full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஹனிமூன் நகரத்துக்குச் சென்ற நயன்தாரா – விக்கி!

 

ற்போது தமிழ் சினிமாவில் ரெக்க கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரே ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தான்.

இவர்கள், ஊர் ஊராக சுற்றும் வீடியோ புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகிக் கொண்டே இருக்கும்.

இப்போது அவர்கள் சென்ற நாடு காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர்.

இது ஒரு ஹனிமூன் நகரமாக தான் பார்க்கப்படுகிறது. ஹனிமூனுக்கு சிறந்த நகரம் எது என்றால் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் ஒரு நகரம் என்றால் அது சாண்டோரினி தான்.

அங்கு இருவரும் தற்போது உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் வாழ்நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்த கனவு உலகத்திற்கு பறந்து கொண்டிருக்கின்றோம்’ என கூறி பதிவிட்டு ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

எது எப்படியோ ‘நல்லா இருங்க’ என்று மனசை தேற்றிக் கொண்டு நகர வேண்டியிருக்கிறது.