full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தொழில் வர்த்தகம் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

புதுடெல்லியில் உலக உணவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தொழில் வர்த்தகம் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது.

உலக வங்கி தொழில் வர்த்தகத்துக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் 130-வது இடத்தில் இருந்த இந்தியா 100-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.

இந்தியாவில் ஒரு நாளில் ஒரு லட்சம் பயணிகள் ரெயில்களில் உணவை சாப்பிடுகிறார்கள். அவர்கள் உணவு பதப்படுத்தும் தொழிற்துறைக்கான வாடிக்கையாளர்களாக உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வரவேண்டும். இந்தியாவில் உணவுபதப்படுத்தும் தொழில் நிறுவனங்களை துவங்க அவை முன்வரவேண்டும்.” என்று கூறினார்.