full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காதலுக்காக மெனக்கெடும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஆதர்ஷ நாயகி நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, “அறம்” திரைப்படம் மூலம் கதாநாயகனுக்கு நிகரான இடத்துக்கு வந்தபோதிலும் கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.

“அறம்” படத்தை நயன்தாராவின் மேலாளராக இருந்தவர் தயாரித்ததால் நயன்தாராவின் சொந்த தயாரிப்பு என்று தகவல் பரவியது. இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இப்போது நயன்தாராவே நேரடியாக தயாரிப்பாளராக மாறப்போகிறார்.

அதர்வாவை கதாநாயகனாக வைத்து “இதயம் முரளி” என்னும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் தமிழ் சினிமாவில் தகவல் அடிபடுகிறது.

ஏற்கனவே, நயன்தாரா விக்னேஷ் சிவனை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க இருப்பதாகவும், அதற்காக தீவிரமாய் கதைகளைக் கேட்டு வந்ததாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், இப்போது வெளியாகி இருக்கும் இந்தத் தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.