full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

என்னுடைய காதலனுக்கு நன்றி – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

நடிகைகளுக்கு சாதாரணமாக பட்ட பெயர்கள் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட நடிகர்களுக்கு இருக்கிறது, ஆனால் நாயகிகளுக்கு அவ்வளவாக இல்லை.

தற்போதைய சினிமாவே வேறு, நாயகிகளும் நடிகர்களுக்கு இணையாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் படங்களை தாண்டி விருது விழாவுக்கு புடவை கட்டிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல். அப்படி நயன்தாரா ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய World Of Women 2018 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு சினிமாவில் சாதித்து வரும் பெண் என்ற அடிப்படையில் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது மேடையில் பேசிய நயன்தாரா, என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருக்கு நன்றி, பின் என்னுடைய காதலனுக்கும் நன்றி என விருது மேடையில் பேசியுள்ளார்.