full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

3வது படத்திற்கு 4 கோடி கேட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்த தகவலைப் படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே நயன்தாரா, ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அவருடன் நடிக்கும் 3-வது படம். இதில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதுபற்றி கவலைப்படாமல் இதில் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.