நயன்தாராவின் கல்யாண வயசு சொன்ன பாடலாசிரியர்

News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

`கல்யாண வயசு’ என்று துவங்கும் அந்த பாடலை புதுமுக பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாகவும், அவர் யார் என்பது சர்ப்ரைசாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியுமா என்றும் படக்குழுவினர் புதிர் வைத்துள்ளனர். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.