full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு?

நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது. இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் ரூ.4 கோடி சம்பளம் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்து விட்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இந்த படம் திரைக்கு வருகிறது. நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.