full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5)

நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5)

தமிழ் சினிமாவில் திருநங்கைகள் பற்றி படங்கள் அதிகமாக வந்ததில்லை. இந்த நிலையில் முதல் முதலாக தமிழில் திருநங்கை ஒருவர் இயக்கி நடித்துள்ள படம் நீல நிற சூரியன். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். இவர் தான் ஒரு பெண் என்பதை உணர்கிறார். இதுகுறித்து தனது பெற்றோர் இடமும் வேலை செய்யும் பள்ளியிலும் சொல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

தமிழில் முதல் திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன். இப்படத்தை எழுதி இயக்கியதுடன் இணைந்து தயாரித்து நடித்தும் உள்ளார். முதல் படம் என்றாலும் சிறப்பாக இயக்கியும் நடித்தும் உள்ளார். முதல் படம் என்று தெரியவே இல்லை. தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சமூகத்தில் திருநங்கைகளுக்கு நடக்கும் அநீதி, அவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாதது, சமூகம் அவர்களை பார்க்கும் பார்வை அனைத்தையும் சொல்லியுள்ளார்.

மேலும் கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம்,ஹரிதா, மணிமேகலை என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். கொஞ்சம் தவறினாலும் ஆவணப்படம் போல் ஆகிவிடும். அதனை கவனமாக கையாண்டுள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. சம்யுக்தா தான் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே உண்மைக்கு
நெருக்கமாக எடுத்துள்ளார். பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் தங்களின் சமூகத்திற்காக படம் எடுத்து வருகின்றனர். அவர்களை போல் தன்னை போன்றவர்களின் வலியை சொல்ல இப்படத்தை எடுத்துள்ள சம்யுக்தா விஜயனுக்கு வாழ்த்துகள்.. மொத்தத்தில் நீல நிற சூரியன் – வெளிச்சம்.