இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் பண்பாட்டு மையம் இணைந்து சமூகம் சார்ந்து பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் நடத்திய “The Casteless Collective”
இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமில்லாமல், இசை உலகில் பெருத்த சலசலப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் அடுத்ததாக “LADIES AND GENTLEWOMEN” என்னும் ஆவணப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த ஆவணப் படத்தை மாலினி ஜீவரத்னம் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் குட்டி ரேவதி பாடல்கள் எழுதியுள்ளார். “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் முத்தமிழ் கலைவிழி மேற்பார்வை செய்திருக்கிறார்.
“இந்த சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கக் கூடிய ஓர்பாலின ஈர்ப்பாளர்களின் வலியையும், அவர்களுக்கான நீதியையும் இந்த ஆவணப் படம் பேசும்”, என இதன் இயக்குநர்
மாலினி ஜீவரத்னம் கூறியுள்ளார்.
வருகிற ஜனவரி 21, மாலை 5.30 மணியளவில் இதன் திரையிடல் சென்னையில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெறவுள்ளது. மேலும் இந்நிகழ்வில், “LESBIAN ANTHEM” பாடல் வெளியிடப்படுகிறது.