full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

திருமணமான ஆண்களை குறி வைக்கும் நடிகைகள், பாலியல் தொழிலாளர்களை விட மோசமானவர்கள் – நேஹா ஞானவேல்ராஜா

தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜா. இவருடைய மனைவி நேஹா. இவர் ‘சி-3’ படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர்.
 
 
நடிகைகளை குறை கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் அதை நீக்கிவிட்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஹா தனது டுவட்டர் பக்கத்தில் முதலில் கூறி இருந்ததாவது:-
 
சில நடிகைகள் குடும்பத்தை உடையவர்கள். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். பொதுவாக சொல்லவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்.
 
சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள். படுக்கையை பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்களை பற்றிய பட்டியலை வைத்திருக்கிறேன். விரைவில் அவர்களை வெளியேற்றுவேன். இவ்வாறு அதில் பதிவிட்டு இருந்தார்.
இதை படித்தவர்கள், அவருடைய கணவருக்கே அப்படி நடந்ததா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து முதலில் டுவிட்டரில் பதிவு செய்தவற்றை நேஹா நீக்கிவிட்டார்.
 
 
பின்னர் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் டுவிட்டரில் நேஹா கூறியிருப்பதாவது:-
 
சில உணர்ச்சிமயமான வி‌ஷயங்களை நான் டுவிட்டரில் பதிவு செய்தது பொழுதுபோக்காக அல்ல. என்னுடைய பிரச்சினை அல்ல. எனக்கும், என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அது என்னை சுற்றி பலருக்கு நடக்கும் வி‌ஷயங்கள்.
 
அந்த மோசமானவர்கள் திருமணமானவர்கள் வாழ்க்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறார்கள். ஒரு பெண் இதுபற்றி எல்லாம் வெளிப்படையாக பேசினால் அதை மக்கள் ரகசியம் வெளியாகிவிட்டது என்கிறார்கள்.
 
எந்த ஒரு நாடகத்தையும், கவனத்தையும் ஈர்க்க நான் இல்லை. பெண்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு பதிவு செய்வதால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை. என் கணவரை பற்றி வந்த சில கருத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை நீக்குகிறேன்.
 
இந்த உணர்ச்சிமயமான பிரச்சினைகளை புரிந்து கொண்டதால் அதை நீக்கி இருக்கிறேன். ஆனால் இப்படி நாடகமாடும் பெண்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக போய் சேரும். சமூக வலைத்தளம் என்பது சக்தி வாய்ந்த ஒன்று. எனவே நல்ல வழியில் ஆதரவு கொடுங்கள்.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.