நேசிப்பாயா – திரைவிமர்சனம் 3.5/5
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன் காரணம் இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் லிஸ்ட் அப்படி அறிந்தும் அறியாமலும் பட்டியல் பில்லா சர்வம் போன்ற படங்களே சாட்சி அந்த வரிசையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்கு பின் விஷ்ணு வரதனின் நேசிப்பாயா படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் நம்மை நேசிக்க வைக்கிறதா என்று பார்ப்போம்
அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி , அதிதி ஷங்கர் – சரத்குமார் – பிரபு – குஷ்பு சுந்தர் – ராஜா – ஷிவ் பண்டிட் – கல்கி கோய்ச்லின் – மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நேசிப்பாயா
கதைக்குள் போகலாம்:
ஆகாஷ் முரளி அதிதி ஷங்கரை கண்டதும் காதலிக்கிறார். ஆனால் சில போராட்டங்கள் பின் காதலில் இணைகிறார்கள்.அதுவும் குறிப்பிட்ட கண்டிசன்வுடன் ஆதித்த காதலால் இருவருக்குள் மோதல் பிரிகிறார்கள். வேலை நிமித்தமாக போர்ச்சுகல் செல்லும் அதிதி அங்கு ஒரு கொலை பழிக்கு ஆள் ஆகிறார். இதை அறிந்து தன் காதலியை மீட்க போர்ச்சுகல் செல்லும் ஆகாஷ் அவரை மீட்டரா இல்லையா என்பது தான் மீதி கதை.
வித்தியாசமான காதல் கதை என்று எல்லாம் சொல்ல முடியாது தமிழுக்கு ஒரு புது கதை என்று சொல்லாம். படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை அதோடு இயக்குனரின் டச் பழனிடங்களில் இயக்குனர் நம்மை மிரட்டுகிறார். இது இயக்குனரின் படம் அதாவது விஷ்ணு வரதன் என்ற தனி மனிதன் படம் காரணம் ஒவ்வொரு காட்சியிலும் கவருகிறார்.அனைத்து கிராஃப்ட்களை தன் வசப்படுத்தி மிக அருமையாக இயக்கியிருக்கிறார்.
ஆகாஷ் முரளி அறிமுக படத்திலே பெண்களை நிச்சயம் கவருவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை தனக்கு கொடுத்த வேலையை மிகநேர்மையாக செய்து இருக்கிறார்.அப்பா முரளி அண்ணன் அதர்வா ஆகிய இருவரையும் ஓவர் டேக் பண்ணுகிறார். நிச்சயமாக தமிழ் சினிமாவில் மிக பெரிய எதிர்காலம் இருக்கு சிறந்த நடிகர் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார்.
அதிதி ஷங்கர் இயக்குனர் சங்கர் பெண் என்ற அந்தஸ்தை இந்த படத்தில் இழந்து அதிதி தான் ஒரு சிறந்த நடிகை என்று காட்சிக்கு காட்சி நிரூபித்து இருக்கிறார். எப்பவும்போல கோமாளி தனம் இல்லாமல் கதாபாத்திரம் தன்மை அறிந்து உணர்ந்து நடித்து இருக்கிறார்..
மற்றபடி படத்தில் நடித்த அனைவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளனர். குறிப்பாக குஷ்பு நம்மை மிரட்டுகிறான் ஒரு ஆங்கில நடிகை போல திரையில் தோன்றுகிறார். நடிப்பில் நம்மை ஆறவைக்கிறார்..
யுவன் சங்கர் ராஜா மற்றும் விஷ்ணு கூட்டணி எப்பவும் நம்மை ரசிக்க வைக்கும் அது இந்த படத்தில் மேலும் நம்மை சுண்டி இழுக்கும் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதே போல படத்துக்கு மேலும் பலம் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியும் ஆங்கில படத்தை பார்ப்பது போல ஒரு பிரமிப்பு அற்புதமான ஒளிப்பதிவு
இயக்குனர் விஷ்ணுவர்தனின் படம் என்றாலே அதற்கென்று ஒரு தனித்தன்மையும் தனித்துவமான ஒரு பாணி இருக்கும் அதை இந்தப் படத்திலும் மிக அழகாக ஒரு ஆங்கில படத்துக்கு இணையாக கொடுத்திருக்கிறார் அனைவரும் கண்டிப்பாக இந்த நேசிப்பாயாவை நேசிப்பார்கள்
மொத்தத்தில் நேசிப்பாயா – நேசம்