சல்மான் கான் வெளியிட்ட புதியப் பாடல்

Audio Launch Special Articles

சல்மான் கான் வெளியிட்ட புதியப் பாடல்

 

 

திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். ரம்ஜான் தினத்தில் அவரது படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த படமும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக அவரது ரசிகர்களுக்கு ‘பாய் பாய்’ என்ற பாடலை வெளியிட்டு உள்ளார். இந்தப்  பாடலை  சல்மான் கானே பாடி நடித்தும் உள்ளார். ” இந்த ரம்ஜானுக்கு எந்த படமும் வெளியிட முடியவில்லை. அதற்கு பதிலாக எனது அற்புதமான ரசிகர்களுக்காக சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுளேன். ‘பாய் பாய் என்ற இந்த பாடல் சகோதரத்துவத்தையும்  ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு பாடல். இந்தப் பாடலை உருவாக்கும் போது நான் எப்படி ரசித்தேனோ அதைப் போல் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்”, என சல்மான் கான் தெரிய்வித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு சல்மான் கான் வெளியிட்ட ‘தேரே பினா’ பாடல் யூட்யூபில் 3 கோடி பார்வைகளைத்  தொட உள்ளது .