மெர்சலின் அடுத்த மிரட்டல் சாதனை!!

News

தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போவதில் எப்போதுமே பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அடுத்தடுத்த தங்களின் படங்களில் இவர்களெல்லாம் ஒவ்வொரு சாதனைகளாக உருவாக்குவதும், அதை அவர்களே தகர்ப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த வரிசையில் இப்போது தளபதி விஜய் நடிப்பில் ஸ்ரீ தேனாண்டாள் ஃப்லிம்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள “மெர்சல்” திரைப்படம் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஏற்கனவே மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி ”யூ டியூபில்” அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ என்ற உலக சாதனையைப் படைத்துள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு சாதனையைப் படைக்கப் போகிறது. அதனை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி உறுதிபடுத்தியுள்ளார்.

அதன்படி ‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் சுமார் 3292 திரையரங்கில் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகும் படம் வசூல் ரீதியில் நிச்சயமாக மிகப் பெரிய சாதனையைப் படைக்குமென்று எல்லோராலும் எதிர்பார்க்கப் படுகிறது!!