full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

இந்த வருடம் நான் நடித்த  ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

 

      

பிக்பாஸ் புகழ் ஆரவ் இணைந்து நடித்த  மார்க்கெட் ராஜா  எம் பி பி எஸ்  படம்   தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார்.

 

படத்தில் இடம்பெறும்  பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களின் first look  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது . 

இப்படத்தை தவிர எழில் சார் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா சார்  இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற பாண்டி முனி  படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

 

மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும்நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.

 

ஆக மொத்தம்இந்த வருடம் ஆறு படங்கள்  வெளியாகும் அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரத்திரங்ககளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம்  என்கிறார் நிகிஷா பட்டேல்.