full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தமன் இசையில், ரிதுன் இயக்கத்தில்., யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கும் -‘நினைவோ ஒரு பறவை’.

‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது..

இதனைப் பற்றி அந்தப்படத்தயாரிப்பு நிறுவனம் … இவ்வாறு கூறுகிறது !

எவ்வாறு .?!

“எங்களது ‘நினைவோ ஒரு பறவை’ படத்திலிருந்து மீனா மினிக்கி…. மற்றும் இறகி இறகி…. , கனவுல உசுர….. என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.

இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடி யில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம் அது மிகவும் மன வேதனை அளித்தது. ஒருவழியாக அந்த துக்கங்களில் இருந்து மீண்டு , மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம் .

 

இப்படத்தை
‘மைண்ட்டிராமா ‘ மற்றும் ‘ஒயிட்டக் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கிறது

இயக்குனர் ரிதுன் இயக்க இதில்
யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார்,

தமன் இசை அமைக்கும் இப்படம் 2022
திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.