full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரிச்சியில் நிவின் பாலியின் முதல் முயற்சி !

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலிடவரு கன்டந்தே’ (Ulidavaru Kandanthe) படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. அவரோடு நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு ‘ரிச்சி’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்கு தயாராகி வருகிறது. தற்போது டிசம்பர் 1-ம் தேதி ‘ரிச்சி’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி.’ என்றார்.