full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது…ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு இப்போது போதை பொருள் பக்கம் திரும்பி உள்ளது. முன்னணி நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தினால் பெரிய நடிகர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்றும் கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இதற்கு நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கங்கனா ரணாவத்தை கண்டித்து பலரும் பேசி வருகிறார்கள்.

கமல்ஹாசனின் இந்தியன் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கூறும்போது, “கங்கனா ரணாவத் இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார். மும்பை மகளான என்னால் இதனை பொறுக்க முடியாது. கங்கனா ரணாவத் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை அவரது சொந்த மாநிலமான இமாசல பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். அங்குதான் போதை பொருள் உற்பத்தி ஆகிறது” என்றார். இதற்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறும்போது, “ஊர்மிளா அவதூறாக பேசி உள்ளார். ஊர்மிளா ஒரு ஆபாச பட நடிகை. நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது. அதை உறுதியாக சொல்ல முடியும். ஆபாசத்துக்கு பெயர் போனவர் ஊர்மிளா. தேர்தலில் பா.ஜனதா கட்சியில் சீட் வாங்குவதற்கு நான் முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவருக்கே தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும்போது எனக்கு கிடைக்காதா?”

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.