நூடுல்ஸ் – திரைவிமர்சனம்
ஹாரிஸ் உத்தமன் நடிப்பில் வெளிவந்து இருக்கும் நூடுல்ஸ் நல்ல சுவையை தருகிறது இல்லை ஒதுக்கிவைக்க தூண்டுகிறதா என்று பார்ப்போம்.
ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,மதன் தக்ஷிணாமூர்த்தி, ஆழியா,திருநாவுக்கரசு,ஹரிதா,மகிமா,வசந்த் மாரிமுத்து,சோபன் மில்லர் மற்றும் பலர் நடிப்பில் ராபர்ட் சற்குணம் இசையில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் நூடுல்ஸ்.
நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவம் நம் வாழ்க்கையின் திசையில் மாற்றிவிடும் சில சமயங்களில் அது மிக பெரிய பிரச்சனையாக மாறிவிடும். இதிலிருந்து நாம் தப்பிக்க எது செய்தாலும் அது நமக்கே சிக்கலாக போய்முடியும். அது நம் வாழ்க்கையையே சீர்குலைத்து விட்டது என்று நாம் சோர்ந்து இருக்கும் போது, அந்த சிக்கல் தன்னாலே சரியானால் எப்படி இருக்கும் அப்படி ஒரு கருவை மய்யமாக வைத்து எடுக்க பட்டு இருக்கும் படம் தான் நூடுல்ஸ். இந்த கதையை மிகவும் சுவரயாசமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மதன்.
ஒரு வீட்டில் நடக்கும் கதையை பிவைத்து கொண்டும் ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து கொண்டும் ஒரு திரைப்படத்தை இரண்டு மணி நேரம் கொடுப்பது சாதாரணவிஷயம் கிடையாது அதையும் விறுவிறுப்பாகாக புதுமையாகவும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிக சிறந்த படமாக கொடுத்து இருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் ஹரிஷ் உத்தமன் ஏற்கனவே அவரின் நடிப்பு நம்மை பல படங்களில் கவர்ந்து இருக்கிறது அது போல இந்த படத்தில் கதைநாயகனாக வளம் வந்து நம்மை மிகவும் கவர்கிறார்.குறிப்பாக அவரின் கதாப்பாத்திரம் மிகவும் சவாலான பாத்திரம் அதை மிகவும் நிறைவாக செய்துள்ளார். ஹரிஷ் நீங்க இனி நாயகனாகவே பயணிக்கலாம்.
நடிகை ஷீலா படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் அது ஒரு தரமான படமாக இருக்கும் என்று அதை இந்த படத்திலும் கொடுத்து இருக்கிறார். இந்த படத்திற்கு இவரின் நடிப்பு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும்.
படத்தில் ஹரியின் குடியிருப்புவாசி வேடத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ராபர்ட் சர்குணம் பின்னணி இசை காதுகளுக்கு மென்மையாக ரீங்காரம் விடுகிறது பாடல்களும் ரசிக்கும் படியுள்ளது .
பல படங்களில் வில்லனாக குணசித்திர கதாபாத்திரத்தில் நம்மை கவர்ந்த அருவி மதன் போலீஸ் இன்ஸ்பெக்டராக வழக்கம் போல் நடிப்பில் பாராட்டு பெற்றிருப்பதோடு, இயக்குநராக தனது முதல் படத்திலேயே திரையுலகினர் வியந்து போகும் விதத்திலும், ரசிகர்கள் அசந்து போகும் விதத்தில் ஒரு எளிமையான கதையை, மிக சுவாரஸ்யமான படமாக கொடுத்திருக்கிறார்.
படம் முழுவதும் ஒரு வீட்டுக்குள் மட்டுமே நடக்கிறது.ஹரிஷ், ஷீலா ராஜ்குமார், சிறுமி ஆழியா இவர்கள் மூன்று பேர் மட்டுமே முதல்பாதி முழுவதும் வந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்பதை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் தமிழ் சினிமாரசிகர்களுக்கு இந்த படம் மிக சிறந்த அனுபத்தை கொடுக்கும். காசுகொடுத்து திரையரங்கிற்கு போகும் ரசிகர்கள் படத்தை மிகவும் ரசித்து என்ஜாய் பண்ணுவார்கள் என்பதில் அச்சம் இல்லை
மொத்தத்தில் நூடுல்ஸ் மிக சிறந்த விருந்தாக அமையும்