full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் !

 

 

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன்  நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில்  2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.

 

 

டிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர்களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. முடிவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பாத்திரம் அசோக் செல்வனிடம் “கோல்டன் டிக்கெட்” ஒன்றை  தருவதாக அமைந்துள்ளது.

 

 

பரபரப்பு கிளப்பியிருக்கும் இந்த டிரெய்லர் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது…  “கோல்டன் டிக்கெட்”பற்றி இப்போது எதுவும் கூற முடியாது அது திரையில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அந்த டிவிஸ்ட் படத்தை வெகுவாக சுவாரஸ்யபடுத்தும். இப்படம் காதல், ரொமான்ஸ், காமெடி கடந்து படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் அவர்களுக்கான அழுத்தமான பின்னணியுடன் உணர்வுபூர்வமாக இருப்பதாக இருக்கும். இந்த காதலர் தினத்திற்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

 

 

அசோக் செல்வன், ரித்திகா சிங் நாயகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் செதுபது மிக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

 

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து
இசை – லியான் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு – விது அயன்னா
படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ்
கலை இயக்கம் – இராமலிங்கம்
உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்
உடைகள் – முகம்மது சுபையர்
சண்டைப் பயிற்சி – ராம்குமார்
பாடல்கள் – கோ சேஷா
புகைப்படம் – ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்
நிர்வாக தயாரிப்பு – நோவா.