Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார், பல தரமான திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார், அவை தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றில் ஒன்று அவரது “புரடக்சன்: 4”, இப்படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்குகிறார், இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் பார்வையாளர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். நடிகர் கவினுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பான “டாடா” இன்று கோலகலமாக வெளியிடப்பட்டது.

அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள், அல்லது கேட்டிருப்பார்கள். தவிர, படத்தில் இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இந்த தலைப்பு இருக்கும்.
படத்தின் மொத்தக் குழுவினரும் படத்தை மிகச்சிறப்பாக வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது, முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை வேடங்களில் நடிக்கும் நிலையில், K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ராசுக்குட்டி’ படம் வெளியானதிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தில் திரையில் ஒன்றாகத் தோன்றுகிறார்கள். மேலும் ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவில் எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), மற்றும் சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.