நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது

cinema news Teasers
0
(0)

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ அமைந்துள்ளது.

குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ஓம் காளி ஜெய் காளி’ ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும்.

நடிகர்கள்: விமல், சீமா பிஸ்வாஸ், RS சிவாஜி, GM குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழுவினர்:*

இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா,
விஷூவல் எஃபெக்ட்: ஸ்ரீ விஷூவல் எஃபெக்ட்,
விஎஃப்எக்ஸ்: ஃபோகஸ் விஎஃப்எக்ஸ்,
கலரிஸ்ட்: எஸ். மாதேஸ்வரன்,
ஆக்‌ஷன் கொரியோகிராஃபர்: கே. ராஜசேகர்,
ஒலி வடிவமைப்பாளர்: சுதர்சனன், அனிதா,
திரைக்கதை: ராமு செல்லப்பா, குமரவேல்,
வசனம்: ராமு செல்லப்பா,
பாடல் வரிகள்: மணி அமுதவன்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: க்ராஃபோர்ட்,

*ஜியோ ஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோ ஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் ஒன்றிணைப்பாகும். நல்ல கதைக்களம், புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றுடன், ஜியோ ஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.