ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14–ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை 8 மாநிலங்களில் விடுமுறை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.
பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுமுறையினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கையானது முன்னெடுக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் மே 14-ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிறு தோறும் விடுமுறை முடிவு கைவிடப்பட்டு வழக்கம் போல் இயங்கும் என்று பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.