full screen background image
Search
Thursday 19 December 2024
  • :
  • :
Latest Update

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம் Rank 3.5/5

சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிப்பில் இவருடன் அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், கனிகா, ஷான், கல்கி, பி ஜி எஸ், அரோல் டி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் தயாரிப்பு: கேப்டன் எம் பி ஆனந்த் இசை: ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு: கே எஸ். காளிதாஸ், கண்ணா ஆர் இயக்கம்: பிரசாத் முருகன் வெளி வந்து இருக்கும் படம் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்

அந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகி இருக்கிறது ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ். ஏற்கனவே வந்த முயற்சி இருந்தும் நல்ல முயற்சி

உயிருக்கு போராடும் மனைவியின் சிகிச்சைக்காக பணம் தேடி அலைகிறார் பரத், திருநங்கையாக தன் மகள் பிறந்திருந்தாலும் அவரை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் துப்புரவு பணி செய்யும் அபிராமி முயல்கிறார். தந்தை எதிர்ப்பையும் மீறி மாற்று ஜாதியைச் சேர்ந்த காதலனை மணக்க துணிகிறார் பவித்ரா லட்சுமி, புகுந்த வீட்டில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி மனம் புழுங்கும் மருமகள் அஞ்சலி நாயர் செய்யும் செயல் என நான்கு குடும்ப வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை அதிர்ச்சியான கிளைமாக்ஸாக இப்படம் தந்திருக்கிறது.

சிங்கிள் ஹீரோ, டபுள் ஹீரோ படங்களில் வழக்கமான பாணியில் நடித்து வந்த பரத் இப்படத்தில் முரட்டுத் தோற்றத்தில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெண் வீட்டார் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்த பரத் தன் மனைவிக்கு நேரும் ஆபத்தான நோயிலிருந்து அவரை விடுவிக்க என்னவெல்லாம் செய்கிறார், அதற்காக அவர் எடுக்கும் முடிவு எதிர்பார்க்காத ஷாக்.

திருநங்கையாக பிறந்த தன் மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணும் அபிராமி அசல் துப்புரவு தொழிலாளியாக மாறி அந்த கதாபாத்திரத்திற்கான நியாயத்தையும் ஒரு தாய்க்கான பாசத்தையும் கொட்டி நடித்திருக்கிறார்.

பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் இருவரின் கதாபாத்திரங்கள் இன்னுமே வித்தியாசப்பட்டிருப்பது வேடத்துக்கு பொருத்தம்.

இந்த நான்கு குடும்ப பிரச்சினைகளிலும் ஒரு துப்பாக்கி தீர்வுகளை ஏற்படுத்தி வைக்கிறது. அது எப்படி நான்கு பேர்களின் கைகளுக்கும் ஒரே துப்பாக்கி செலகிறது என்பதெல்லாம் குழப்பமாக இருந்தாலும் கிளைமாக்சில் அதற்கான பதில் கிடைக்கிறது.

ஏ சர்டிபிகேட் படமாக இருந்தாலும் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் ஓரளவுக்கு நியாயத்தை தூக்கிப் பிடிக்கிறது.

பட்ஜெட் படம் என்பதால் அளவுடன் காட்சிகளை படமாக்க வேண்டி இருந்திருக்கிறது. கூடுதல் பட்ஜெட் கிடைத்திருந்தால் படத்தை இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுத்திருக்கலாம்.. இப்படத்தை கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கிறார்.

ஜோஸ் பிராங்கிளின் இசை காட்சியோடு ஒத்துப் போயிருக்கிறது

இடதுசாரி சிந்தனையுடன் சில காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் பிரசாத் முருகன் சென்சார் அதிகாரிகளின் கெடுபிடியையும் தாண்டி சில சம்பவங்களை செய்திருக்கிறார்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – அனைவருக்கும்