கௌதம் மேனனுக்கு எதிராக இன்னொரு சர்ச்சை!!

News

“நரகாசூரன்” பட ரிலீஸ் விவகாரத்தில் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் கவுதம் மேனனுக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரை உலகில் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவர் மீது குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

“முதலில் தங்களை ஏமாற்றியதாக அவருக்கு எதிராக புகார் அளித்தோம். பின்னர் இந்த பிரச்சனையை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்தோம். இன்னும் பலர் அவருக்கு இரையாகி வருகிறார்கள். கார்த்திக் நரேன் இந்த விவகாரத்தை தைரியமாக வெளியிட்டிருக்கிறார். அவரால் பாதிக்கப்பட்ட பலரின் பிரச்சனைகள் இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. அவரது வலையில் இருந்து மற்றவர்களை காப்பாற்ற உதவுங்கள். அவர் ஒரு தந்திரமான நரி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த டுவீட்டின் மூலம் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், கவுதம் மேனனை மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் கவுதம் மேனன் இயக்கிய “விண்ணைத்தாண்டி வருவாயா”, “நடுநிசி நாய்கள்”, “எக் தீவானா தா”, “நீதானே என் பொன்வசந்தம்” உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.