full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் சினிமாவை விட்டு விலகுவேன் : நந்திதா

`அட்டக்கத்தி’, `எதிர்நீச்சல்’, `இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, `முண்டாசுபட்டி’ படங்களில் நடித்தவர் நந்திதா. தற்போது `நெஞ்சம் மறப்பதில்லை’, `வணங்காமுடி’, `உள்குத்து’ படங்களில் நடிக்கிறார். இது பற்றி கூறிய நந்திதா…

” `உள்குத்து’ படத்தில் நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் வேலைபார்க்கும் சாதாரண பெண்ணாக நடிக்கிறேன். சூட்டிங் நடந்த துணிக்கடையில் நான் வேலை செய்வதாக நினைத்து துணி வாங்க வந்த பெண்கள் என்னிடமே விலை கேட்டனர்.

இந்த படத்தில் தினேஷ் ஹீரோ. பாலசரவணன் எனது அண்ணனாக நடித்திருக்கிறார். நான் அவருக்கு பயப்படும் தங்கை. இயக்குனர் கார்த்திக் இந்த படத்தை அழகாக எடுத்து இருக்கிறார்.

எனக்கு பேய் படங்கள் பிடிக்காது. தெலுங்கில் நான் நடித்த பேய்படம் `ஹிட்’ ஆனது. அது போன்ற வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவற்றை தவிர்த்து விட்டேன். பேய் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை.

`பாகுபலி’ ரம்யாகிருஷ்ணன் மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த பிறகு தான் திரை உலகை விட்டு விலகுவேன். `நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். நான் குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பதைதான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இனி வித்தியாசமான வேடங்களில் நடிப்பேன். பிடித்த கதைகளில் மட்டும்தான் நடிக்கிறேன். திரைத்துறையில் என்னை யாரும் காதலிக்கவில்லை. நானும் காதலிக்க வில்லை. படித்த காலத்தில் சிலர் என்னை விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவேன். திரைத்துறையிலும் `பார்ட்டி’களுக்கு செல்வது இல்லை” என்றார்.