full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பெற்றவர்களுக்கு பாடம் புகட்டும் ஓவியா

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையைச் சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.

இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறிய பின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான்.

அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று, அதன் பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சண்டையினால் சரியான கவனிப்பின்மை காரணமாக இறந்து பேயாக மாறுகிறது. அதன்பின் தனது இந்த நிலைமைக்கு காரணமான தனது பெற்றோருக்கு அது பாடம் புகட்டுகிறதா, இல்லை பாவம் என விட்டுவிடுகிறதா என்பது தான் படத்தின் கதை.

மலையும் மலைசார்ந்த இடமும் தான் கதைக்களம் என்பதால் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – நிஷாந்தன் & விபின் சந்திரன், இசை – பத்மஜன், நடனம் – அனீஸ் ரஹ்மான், பாடல்கள் – அண்ணாமலை, முருகன் மந்திரம் & M.F.ஜான்சன், பாடியவர்கள் – வைக்கம் விஜயலட்சுமி, ஆனந்த் அரவிந்தக்சன், ஜாஸின் & பூர்ணிமா, இயக்கம்: கஜன் சண்முகநாதன், தயாரிப்பு: காண்டீபன் ரங்கநாதன் (இமாலயன் என்டர் டெயின்மென்ட்)