full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!

தனது மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். ரஜினியை முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் கபாலியாக முன்னிறுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பயனாக மீண்டும் ரஜினியை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தற்போது “காலா”வில் ரஜினியை இயக்கி வரும் ரஞ்சித், ரஜினியின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியாவது,

“என்மேல் அன்பும் பெரும் நம்பிக்கையும் கொண்ட “காலா”அவர்களுக்கு மனமகிழ்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.