full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காலா ரிலீஸ் குறித்து அறிவித்த பா ரஞ்சித்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘காலா’.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ரஜினி தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “விஜய்யின் `மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை, அது மக்களின் பிரதிபலிப்பு தான்.” என்றார்.

மேலும் ‘காலா’ படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

ரஜினியின் `2.0′ வருகிற ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.